மன்னா ரொஷான் கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம்

0
151
பாதுக்கை பகுதியில் வைத்து போதைப் பொருள் வர்த்தகரான மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டுபாயில் இருந்து இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான லலித் கன்னங்கரா என்பவரின் நேரடி தலையீட்டில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மன்னா ரொஷான் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் லலித் கன்னங்கரா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மன்னா ரொஷானின் மனைவி இந்த விடயத்தை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதேநேரம் கடுமையாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மன்னா ரொஷான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நண்பர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பண உதவி கோரியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தநிலையில் லலித் கன்னங்கரா, போதைப் பொருள் வழங்குவதாக தெரிவித்தமைக்கு இணங்க, மன்னா ரொஷான் தமது உதவியாளருடன் துப்பாக்கி சூடு இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் பாதுக்கை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டனர் டி-56 ரக துப்பாக்கி பிரயோகத்தால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.