மன்னார். தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் மரணம்

0
186

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும், ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை மன்னார் – தலைமன்னார் பிராதன வீதி பருத்திப் பண்ணையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த 32 வயதான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.