அம்பாறை மருதமுனையில், போதைப் பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான கணக்களரை எதிர்வரும் 28ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை சந்தேக நபர் 840 மில்லிக் கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 4 கிராம் 540 மில்லிக்கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.