மறைந்த மாவையின் பூதவுடலுக்கு ஹக்கீம் அஞ்சலி!

0
53

மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு, முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முஸ்லீம் காங்கிறஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று மாலை அஞ்சலி செலுத்திய அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசாவின் பூதவுடல் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறவுள்ளன.

அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.