மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

0
181

சரக்கு புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்ததுள்ளது. கண்டியிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்டு வந்த சரக்கு புகையிரதம் ரொசல் புகையிரத நிலையத்தில் காலை 7.50 மணியளவில் தடம் புரண்டுள்ளது. குறித்த புகையிரத்தத்தின் ஒரு பெட்டி தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளதாகவும் இதனை மீண்டும் தண்டவாளங்களில் தடம் இருத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மற்றும் பதுளையிலிருந்து செல்லும் பயணிகளை ரொசல்ல பகுதியில் கொழும்புக்கும் பதுளைக்கும் மாற்றியனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது புகையிரத பாதைகள் புணரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.