மாணவனுக்கு மதுபானம் வழங்கிய ஆசிரியர்!

0
20

பெல்மதுல்லை பகுதியில் 19 வயது மாணவரொருவருக்கு மதுபானத்தை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் இன்று நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

மதுபானத்தை அருந்திய குறித்த மாணவர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்மதுல்லை நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.

இதன்போது அவர் மதுபானம் அருந்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார்.
குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் மாணவனின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

அந்த குழுவினர் மேலதிக வகுப்பு ஆசிரியரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.