மாத்தளை கலேவெல பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் கைது

0
149

மாத்தளை கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலு ஹோமபாவ யாய பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவக்கையில் ஈடுபட்டு இருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 35, 29, 30, 26 வயதுகளையுடைய ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.