மாவனெல்லை மண்சரிவு – நால்வரின் சடங்களும் மீட்பு

0
222

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரினதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்ததில் இவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் இருவர் காணமால் போயிருந்தனர்.

மண் மேட்டில் சிக்கியிருந்த 23 வயதுடைய மகளுடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

57 வயதுடைய தந்தை, 53 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகனின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.