மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி!

0
10

சூரியவெவ ரண்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனும் என தெரியவருகிறது .

நேற்று (05) பிற்பகல் 2.30 அளவில், 5 வயதுடைய சிறுவன், வீட்டின் பின்புறம் கட்டப்பட்டுள்ள வெதுப்பகத்தின் பாதுகாப்புக்காவும் , நிறுத்தப்பட்டிருந்த சிறிய பாரவூர்த்தியின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியுள்ளார்.

சிறுவனை தேடிக்கொண்டிருந்த தாய், வீட்டின் பின்புறம் சிறுவன் மின்சார வேலியில் சிக்கியிருப்பதைக் கண்டு காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். சிறுவனை மீட்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே தாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.