மின்வெட்டு தொடர்பில் சற்றுமுன் வெளிவந்த புதிய அறிவிப்பு!

0
183

தென் மாகாணத்தில் மாத்திரம் நாளைய தினம் ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு அமுலாகாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தென் மாகாணத்தில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாளை தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான நேரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவ்வாறு ஏனைய பகுதிகளில் நாளை மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டி தேவை ஏற்பட்டால் பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.