இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 3 மணித்தியால மின் துண்டிப்பு அமுலாகிறது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பீ முதல் டபிள்யு வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. குறித்த வலயங்களில் இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர் பகுதிகளில் காலை 6 மணிமுதல் 8.30 வரையான இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பு அமுலாகும். எம்,என்,ஓ,எக்ஸ்,வை,இசட் ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 முதல் 8.30 வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால், நாடாளவிய ரீதியில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்குது.