மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.