Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
தமிழ் திரையுலகில் 80,90 களின் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது படங்களில் நடிப்பதை குறைத்திருந்தாலும் இன்று வரை இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவர் கடைசியாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கவுள்ள முழுநீள நகைச்சுவை படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் சாய் ராஜகோபால், சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் என்றார்.