அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோபைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுதந்திரம் மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் ஒரு தருணம் இது என தெரிவித்துள்ள பைடன் இது அலட்சியமாக இருக்கவேண்டிய தருணம் இல்லை அதனால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்
நான்கு வருடங்களிற்கு முன்னர் நான் தேர்தலில் போட்டியிட்டவேளை நாங்கள் அமெரிக்காவின் ஆன்மாவிற்கான மோதலில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தோம் தற்போதும் அந்த நிலையிலேயே உள்ளோம் என பைடன் மூன்று நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனிற்கு தற்போது 80 வயது – அவரது வயதை அடிப்படையாக வைத்து இரண்டாவது தடவை அவர் போட்டியிடுவது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாகடொனால்ட் டிரம்பும் தெரிவித்துள்ளார்