யாழ். கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவசிதம்பரத்தின் ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 101 வது ஜனன தின நினைவு நிகழ்வு காலை 10.30 க்கு நெல்லியடியில் அன்னாரின் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் அன்னாரின் சிலை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி நினைவேந்தல் நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.