முட்டை இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

0
47

அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாடுகள் காரணமாக, முட்டை இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை, அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே, முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் திட்டத்தை தயார் செய்யாமல், முட்டைகளை இறக்குமதி செய்வதனால், உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்கும்.எனினும், பண்டிகைக் காலத்திற்கு, முட்டை மற்றும் கோழி இறைச்சியை தட்டுப்பாடின்றி வழங்க வாய்ப்புள்ளது.
என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.