யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (19) இந்த பாராட்டு விழா இடம் பெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி காவல்துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.