முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் பேரணி முன்னெடுப்பு

0
126

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.