முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க நடவடிக்கை

0
195

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து கலந்துரையாடியபோது, ஜனாதிபதி இதனைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.