மேலதிக வகுப்புக்குச் சென்ற 50 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!

0
1019

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மேலதிக வகுப்புக்குச் சென்ற 50 மாணவர்கள், கல்வி நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை ரணவன பிரதேசத்திலுள்ள கல்வி நிலையமொன்றில் மேலதிகக் கற்றலில் ஈடுபட்ட மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுளளனர்.

17-19 வயதுக்கு உட்பட்ட மாணவர், மாணவிகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுதர சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கு, மேற்படிக் கல்வி நிலையத்தில் இணையத்தளத்தினூடாக கற்பித்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் அனுமதியுடனேயே மேற்படி மாணவர்கள் குறித்த கல்வி நிலையத்துக்குச் சென்றுள்ளனர் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.