யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று இரவு வேளையில் பதற்ற நிலை ஒன்று உருவாகி இருந்த நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ள நிலையில் அதனை ஏற்க மறுத்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.
இன்று காலை 8.00 மணியிலிருந்து நாளை காலை 8.00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.