யாழ். தீவக பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு

0
157

யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் ‘அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு’ நேற்று இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை புளியங்கூடலில் அமைந்துள்ள மகாமாரி சிறுவர் நல்வாழ்வு மண்டபத்தில் கருத்தமர்வு இடம்பெற்றது.

இக்கருத்தமர்வில் 42 பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் வளவாளராக வடமாகாண இளையோர் வலுவூட்டல் பயிற்றுவிப்பாளர் சந்துரு கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.