யாழ். வட்டுக்கோட்டை, அராலி பேச்சியம்மாள் ஆலயத்தில் திருட்டு

0
125

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தில் ஒலிபெருக்கி சாதனம் திருடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் ஆலய மடப்பள்ளியின் கதவு திறந்திருந்ததனை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர்கள் இந்தவிடயத்தை ஆலய நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆலய மடப்பள்ளியின் பூட்டு உடைத்து ஒலிபெருக்கி சாதனம் திருடப்பட்டமையை நிர்வாகத்தினர் உணர்ந்தனர். இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.