ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் -ருவான் விஜயவர்த்தன

0
186

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அடுத்த தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘ஜனாதிபதிக்கான ஆதரவு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு ஆதரவாக பல அரசியல் குழுக்கள் இருக்கின்றன. நாடு உறுதியான நிலையை எட்ட ரணில் விக்கிரமசிங்க 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கத்துக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த குழுக்கள் ஒன்றிணைந்தால் நாங்கள் தேர்தலை கூட்டணியாக சந்திக்க முடியும்’ என ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.