
பொல்கஹவலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் ஒருவர் ரயில் மார்க்கத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.