ரயிலில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு

0
8

கல்ஓயா பிரதேசத்தில் மீனகயா கடுகதி ரயில் மோதியதில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் மற்றொரு காட்டு யானை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதையில் கல்ஓயாவில் 141ஆவது ரயில் மைல் கல்லுக்கு அருகில் நேற்று (19) இரவு 11.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கவுடுல்ல வனப்பகுதியில் இருந்து ரயில் பாதையின் குறுக்கே பயணித்த காட்டு யானைகள் கூட்டம் நேற்று இரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 7 யானைகள் கொண்ட கூட்டத்தில் இருந்த ஐந்து யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன.விபத்து நடந்த ரயில் அருகே விழுந்த இரண்டு காட்டு யானைகள் பலத்த காயமடைந்தனஇ அவற்றில் ஒன்று பின்னர் இறந்தது. விபத்துக்குள்ளான காட்டு யானை அது இறப்பதற்கு முன்பு 3 வயதுடைய குட்டி யானையுடன் நேரத்தைச் செலவிட்ட விதம் அனைவரின் இதயங்களையும் தொட்டது.

கவுடுல்ல தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில்இ இறந்த காட்டு யானைகள் 8, 15 மற்றும் 20 வயதுடையவை என்றும், அவற்றில் ஐந்து பெண் யானைகள் என்றும் தெரிவித்தனர்.விபத்தைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த காட்டு யானைக்கு கிரிதலே வனவிலங்கு கால்நடை பிரிவு அதிகாரிகள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டது, மேலும் இந்த இடம் யானை கடக்கும் இடம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் பாதையை சரிசெய்து இன்று காலை தடம்புரண்ட ரயிலை மீட்டெடுத்துள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் ஹபரணையில் உள்ள கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன. விபத்தில் சிக்கிய மீனகயா கடுகதி ரயிலில் பயணித்த பயணிகளை வேறு ரயிலுக்கு மாற்றவும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.