ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் உட்பட இருவர் பலி: நான்கு வயது குழந்தை காயம்

0
91

குருணாகல் மற்றும் கம்பளை ஆகிய மாவட்டங்களில், ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயது குழந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் வெல்வேல பிரதேசத்தில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது நான்கு வயது பெண் குழந்தை காயமடைந்த நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 28 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குல உயரமுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குழந்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிப்பனே பிரதேசத்தில் கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் 50 தொடக்கம் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.