ரஷ்யப் படைகள் நெருக்கடியை அதிகரிக்காது என புதின் உறுதியளித்ததாக பிரான்ஸ் அதிபர் தெரிவிப்பு

0
133

யுக்ரேன் எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் தனது நெருக்கடியை அதிகரிக்காது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு உறுதியளித்ததாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்கு முன், “எந்த விதமான சீரழிவோ அல்லது விரிவாக்கமோ இருக்காது என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், உத்தரவாதம் அளிக்கும் எந்தவொரு கூற்றும் சரியானதல்ல என்று ரஷ்யா கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு அதிபர் மக்ரோங் இந்த வாரம் தேசிய தலைநகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
திங்கட்கிழமையன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, செவ்வாய்கிழமையன்று அவர் யுக்ரேன் தலைநகரமான கீவை வந்தடைந்தார்.
யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன. ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது.