ராணுவத்தை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் – பாகிஸ்தான் ஜெனரல் மேஜர்

0
148

ராணுவத்தை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் எனவும், ராணுவத்தை விவாதத்திற்கு வெளியே வைக்குமாறும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவான ஐஎஸ்பிஆரின் டைரக்டர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, ​​​​இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தலைமையில் கார்ப்ஸ் கமாண்டர் மாநாடு நடைபெற்றது எனவும், அம்மாநாட்டில் பாதுகாப்பு சவால்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து பங்கேற்பாளர்களும் அரசியலமைப்பின் மேலதிகாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். மேலும், ஜனநாயகத்தில் அரசியலமைப்புக்கு உட்பட்டு இயங்குவதே அனைத்து அமைப்புகளுக்கும் நல்லது என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு எதிராக பிராசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முன்னாள் அதிகாரிகளின் போலிச் செய்திகள் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.
அடிப்படையற்ற குணநலன் குறித்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என அவர் கூறினார். மேலும் இது, “சட்டத்திற்கு புறம்பானது, தார்மீகமற்றது, தேச நலனுக்கு எதிரானது” எனவும் தெரிவித்தார். நீதிமன்றங்களின் முடிவுக்கு விட்டுவிடுவது சிறந்தது என அவர் கூறினார்.