ரிதியகம சஃபாரி பூங்காவின் சிங்கக்குட்டிகளுக்குப் பெயர்சூட்டும் விழா இன்று!

0
38

அம்பலாந்தோட்டை – ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா இன்று நடைபெற்றது.முன்மொழியப்பட்ட 4,000 பெயர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா இன்று காலை விலங்கியல் பூங்காத் திணைக்கள பணிப்பாளர் ஆர்.சி. ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

ஆண் சிங்கக் குட்டிக்கு மேகா என்றும்இ ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்குத் தாரா, அக்ரா, பூமி, அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பெயர்களைப் பரிந்துரைத்தவர்களில் மூவர் பெயர்சூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த மூவருக்கும் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.