ரியான் பராக்கிற்கு 12 இலட்சம் ரூபாய் அபராதம்

0
12

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. 

குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான் பராக்கிற்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் எதிர்வரும் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.