லாஃப் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் W.KH வகபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கபட்டுள்ளது எனவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோ எடை கொண்ட லாஃப் கேஸ் சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது.