புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்அடிய பிரதேசத்தில், அனுமதிபத்திரமின்றி பாதுகாப்பற்ற முறையில் பாரியளவிலான தொகை எரிபொருளை லொறியொன்றில் கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நுரைச்சோலை, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27, 31 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 4000 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.