வட மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் தலைவராக முன்னாள் அரச அதிபர் நியமனம்!

0
125

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவால் 9ம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றில் இருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின் பதவிகள் வெறிதான நிலையில் தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவரான வேதநாயகன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம் யாழ்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னால் அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் மற்றுமோர் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.