வர்த்தகப் போர்! : அமெரிக்கா வெற்றி பெற முடியாது!

0
58

சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி சிறியது எனவும், அவற்றில் பெரும்பாலானவை ஆடைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு உறவு காரணமாக, ஆடைத் தொழில் தொடர்பான வேலைகள் இழக்கப்பட்டால், அவர்கள் வேறு வேலை வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் வரை அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி முறையை நீண்ட காலத்துக்குத் பராமரிக்க முடியாது எனவும், இந்த வரி அமெரிக்காவைப் போலவே உலகையும் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது.

அந்தப் போர் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்ட ரில்வின் சில்வா நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த தவறான முடிவை விரைவாக மாற்ற வேண்டியிருந்தது என தெரிவித்தார்.