வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

0
274

கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பு முதன்முறையாக சிங்கள மக்கள் வாழும் பகுதியில் கல்வி அபிவிருத்திக்கான உதவியை வழங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் இரஜகலதென்ன என்னும் பாரம்பரிய சிங்கள கிராமத்தில் வாழும் மிகவும் வறிய நிலையில் உள்ள சிங்கள மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் சுமார் 160 மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.


சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்திடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக சோமசுந்தரம் பரமேஸ்வரன் இதற்கான ஒரு பகுதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச் சங்கத்தின் பொருளாளரும் சமூக சேவையாளருமான தொழிலதிபர் க.துரைநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


நிகழ்வில் கிழக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் மு.விமலநாதன், உப தலைவர் க.வரதாரஜன்,செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன், பொருளாளர் அக்கரைபாக்கியன்,உப செயலாளரும் ஊடகவியலாளருமான நடனசபேசன் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.