28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருக்கு கௌரவிப்பு நிகழ்வு!

வவுனியாவில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சந்தியலிங்கத்திற்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான கலாநிதி எம்.பி.நடராஜா, து.ரவீகரன், மேரிகமலா மற்றும் பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நெதர்லாந்து அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 60 மில்லியன் யூரோ நிதி உதவியில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார அபிவிருத்தியை நினைவுகூரும் முகமாக வைத்தியர்; ப.சத்தியலிங்கம் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles