வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அசத்தல் வசதி

0
125

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் அந்தரங்க தன்மையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஓர் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நபருடனான குறுஞ்செய்தி பரிமாற்றத்தை (Chat) லொக் செய்து பயன்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சொல் (password) அல்லது பயோமெட்ரிக் ஆத்தாடிக்கேஷன் (biometric authentication) முறையில் இந்த குறிப்பிட்ட chatஐ லொக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் Chatன் தகவல்களை ரகசியமாக பேண முடியும்.

இந்த வசதியின் மூலம் மெசேஜ் அனுப்பும் நபரின் பெயர் அந்த மெசேஜ் என்பனவற்றை நோட்டிபிகேஷனில் இருந்து மறைத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக ஏற்கனவே ஒட்டுமொத்த வாட்ஸ் அப் செயலியையும் பாஸ்வேர்ட் அல்லது பயோமெட்ரிக்ஸ் முறையில் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், அனுமதி இன்றி whatsapp மெசேஜ்கள் பார்வையிட முடியாது என்ற அம்சம் காணப்படுகின்றது.

மேலும் இந்த வசதியை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட Contact லிஸ்டில் இருக்கின்ற நபருடனான Chatஐ ரகசியமாகப் பேணுவதற்கு whatsapp புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.