இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற ஜோய் என்ற இளைஞன் ஒருவர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கோரி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோய் என்பவர் 8 வயதாக இருந்த போது, இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக அவரது பெற்றோர் படகில் ஏற்றி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.மண்டபம் சென்றடைந்த ஜோய் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நிலையில், எந்தவிதமான அடையாள அட்டைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என ஜோய் பல முறை மனு அளித்தும் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றார்.இதேவேளை நேற்றையதினம் (11) மீண்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற ஜோய் ஆட்சியர் அலுவலகம் அருகே மண்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை காவல்துறையின் அவரை க்யூ பிரிவு அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.