Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மார்ச் 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தின் அனுபவம் குறித்து கூறியிருந்தார். அதில், ‘விடுதலை- 1’ இயக்க ரூ.4.5 கோடி தான் கொடுக்கப்பட்டது என்றும் ஆனால், படத்தை எடுத்து முடித்த பிறகு பட்ஜெட் ரூ.65 கோடியை தாண்டியதாகவும் கூறியிருந்தார். இந்த நேர்காணலில் வெற்றிமாறனுடன் இயக்குனர்கள் நெல்சன், கார்த்திக் சுப்பராஜ், பொலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் உடனிருந்தனர்.