28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விண்ணில் ஏவப்பட்ட ககன்யான் விண்கலம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV- D1  ரொக்கெட் மூலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (21) காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டம் இன்று நடக்க முடியவில்லை. இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதன் பின்னர் 10 மணியளவில் மீண்டும் விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 

இதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஆரம்பமானது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகளால் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன் நோக்கம் என்ன?

பூமியிலிருந்து, 400 கிலோமீற்றர் தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்.

மாதிரி விண்கலம் தரையிலிருந்து 16.6 கிலோமீற்றர் தூரம் வரை அனுப்பப்பட்டு வங்கக்கடலில் இறக்கப்படும். 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ல் செயல்படுத்த முடிவு

சில தினங்களுக்க முன், ககன்யான் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: 

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோனையோட்டம் வெற்றி பெற்றது. இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டபடி கடலில் மாதிரி விண்கலம் தரையிறங்கியது. வானிலை காரணமாக காலை 8 மணிக்கு விண்கலத்தை ஏவும் சோதனையில் தாமதம் ஏற்பட்டது. கடலில் விழுந்த மாதிரி கலனை மீட்கும் பணியில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles