விமல், கம்மன்பில, வாசு, பிரதமருக்கு இடையிலான சந்திப்பு தள்ளிவைப்பு!

0
227

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு, இடம்பெறாத நிலையில், அது பிறிதொரு தினத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என ஸ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சியின் உப தலைரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.