விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக இம்சித்த ஒருவர் கைது!

0
9

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பிரவேசித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையிலிருந்த பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக இம்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் விமானிக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து விமானி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. விமானம் தரையிறங்கியதன் பின்னர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.