வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்ததில்..

0
65

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீடு சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று முன்தினம் இவ்வாறு சேதமாகியுள்ளது.

இதேவேளை, அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.