வீரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

0
307
Veeran movie posters. Photo: IMDb

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வீரன்.

சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் ஆதிரா, சசி, முனீஸ்காந்த், காளி வெங்கட், வினய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வீரன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், வீரன் படத்தின் இரண்டு நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்துள்ள இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்திற்கு நல்ல வசூல் குவியும் என கூறப்படுகிறது.