வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்களில் திருத்தம்!

0
137

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்களை திருத்துவதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
திருத்தப்பட்ட அஞ்சல் கட்டணங்கள் ஜுலை 19ஆம் திகதி முதல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்களின் கீழ், ஆகஸ்ட் 1 முதல் கருமபீடத்தினால் பெறப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு அஞ்சல் பொருட்களுக்காக வசூலிக்க கருமபீட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்கள் குறித்து அலுவலகம் அல்லது கருமபீடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க அனைத்து அஞ்சல் நிலையங்களினதும் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திணைக்களத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வான் மற்றும் கடல் அஞ்சல் இயக்கப்படும் நாடுகளின் விபரங்கள், பிரதி அஞ்சல்மா அதிபர் (செயல்பாடுகள்) மூலம் மாதந்தோறும் பகிரங்கப்படுத்தப்படும்.
இது https//:epay.slpost.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
சாதாரண விமான அஞ்சலுக்கான சேவைக் கட்டணங்கள், U-Packet சேவையின் செயல்பாடு, EMS சேவைக்கான கட்டணக் கணக்கீடு, வெளிநாட்டு பொதி சேவைக்கான எடை வரம்புகளுக்கு ஏற்ப இந்த விலைகளும் திருத்தப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் (செயல்பாடுகள்) ராஜித ரணசிங்க அறிவித்துள்ளார்.