சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 3 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தின் நுழைவாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.