வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கல்கிஸ்ஸ காவல்துறை உத்தியோகத்தரின் காதலி கைது!

0
7

கல்கிஸ்ஸ காவல்துறையிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் காதலி எனக் கூறப்படும் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் பெற்றோர் காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காவல்துறை உத்தியோகத்தருக்கு 48 மணி நேரம் உதவிய 28 வயதுடைய மற்றொரு காவல்துறை உத்தியோகத்தரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .