கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யஸரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வெள்ள நிலைமை ஏற்பட்டால் கொவிட் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் தினங்களில் மழையுடனான காலநிலை அதிகரித்து அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், நிவாரண நடவடிக்கைகளுக்காக பத்து கடற்படைக் குழுக்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் உடுகம பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை மீட்டுள்ளார்கள்.
வரக்காபொல – கஸ்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக இரண்டு பேர் மண்ணில் சிக்கிய நிலையில், இராணுவத்தினர் அவர்களை மீட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)