காலி, கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காலி – கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய வைத்தியரை பணியிட மாற்றம் செய்ய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டுள்ளனர். வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரால் மற்றைய சில வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீர்வு வழங்க வலியுறுத்தி இன்று காலை 8 மணி முதல் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வைத்தியர்கள் கடந்த வாரம் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர். இதனிடையே சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் மஹரகம அபெக்க்ஷா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.